கடன் தொல்லை : கணவன் கண் முன்பு சுட்டுக் கொல்லப்பட்ட இளம் பெண்

Must read

டில்லி

டனைத் திருப்பிச் செலுத்தாதவரின் மனைவி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

தில்லியில் உள்ள பகர்கஞ்ச் பகுதியில் தன் மனைவி பிரியா மெஹ்ராவுடன் பங்கஜ் மெஹ்ரா என்னும் தொழிலதிபர் வசித்து வருகிறார்.  இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.  நேற்று இரவு குடும்பத்தினருடன் பங்கஜ் தனது காரில் ஷாலிமார் பகுதியில் உள்ள குருத்வாராவுக்கு சென்றிருந்தார்.   பிரார்த்தனையை முடித்து விட்டு மூவரும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

சாலையில் சென்றுக் கொண்டிருந்த பங்கஜ் காரை மற்றொரு கார் பின் தொடர்ந்து அவர்களை மடக்கி  நிறுத்தினர்.  அந்தக் காரில் இருந்த அடையாளம் தெரியாத சிலர் பஞ்கஜை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர்.   துப்பாக்கிச் சூட்டில் பிரியாவின் கழுத்தில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தார்.  பங்கஜ் மற்றும் அவருடைய மகன் ஆகியோர் துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பி விட்டனர்.

உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு பிரியாவை எடுத்துச் சென்றுள்ளனர்.  ஆனால் மருத்துவமனையில் பிரியாவுக்கு போலீசார் அனுமதித்த பின்னர் தான் சிகிச்சை அளிக்க முடியும் என காலம் தாழ்த்தி  உள்ளனர்  போலிசார் துப்பாக்கிச் சூடு நடந்த இடம் தங்களின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் வரவில்லை என மறுத்துள்ளனர்.  பங்கஜ் கெஞ்சியபின் போலீசார் மருத்துவமனைக்கு போலீசார் வந்துள்ளனர்.

பிரியா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.  பிரியாவின் மரணத்துக்கு மருத்துவமனை, போலீசார் ஆகியோரின் அலட்சியத்தால் பிரியா மரணம் அடைந்தார் என பங்கஜ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

இந்தக் கொலைக்கான காரணம் பற்றி விசாரித்த போது, பங்கஜுக்கு வைக்கப்பட்ட குறியில் பிரியா கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது.  பங்கஜ் தனது வியாபார வளர்ச்சிக்காக கடன் வாங்கி உள்ளார்.  ஆனால் அதை திருப்பித் தரவில்லை.  இது தொடர்பாக அவருக்கும் கடன் கொடுத்தவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.  அதனால் ஆட்கள் மூலம் அவர் பங்கஜை கொல்ல தாக்குதல் நடத்திய போது பிரியா அவர் கணவர் கண் முன்பு கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது.

போலீசார் வழக்கு பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

More articles

Latest article