சென்னை:  சென்னை  மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும்,  செம்பரம்பாக்கம் உள்பட  அனைத்து ஏரிகளிலும்  நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்ங்களில் மழை பெய்து வருவதால், சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகளின் நீர் மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய   5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்க முடியும் என்ற நிலையில்,  தற்போது ஏரிகளில் தண்ணீர் இருப்பு 8667மில்லியன் கனஅடி ஆக உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 73 சதவீதம் ஆகும். இதில், தற்போது சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தினசரி  189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது  என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கடந்த இரு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் மிக முக்கிய ஏரிகளில் ஒன்றாக செம்பரம்பாக்கம்  ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. செம்பரபாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 14 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. அதுபோல  ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கனஅடி.  இதில், தற்போது  3135 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. 188 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது ( அதாவது, குடிநீருக்காக 104  கனஅடி நீர், சிப்காட்தேவைக்காக 4 கனஅடி நீர், 50 கனஅடி நீர வெளியேற்றப்படுகிறது, பிற காரணங்களுக்காக 31 கனஅடி நீர் ).  ஏரிக்கு நீர் வரத்து 362 கனஅடியாக உள்ளது.  இதனால்  ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டி உள்ளது. இன்னும் இரு நாட்கள் தொடர்ந்து மழை பெய்தால் ஏரி முழு கொள்ளவை எட்டிவிடும் என்பதால், அதிகாரிகள்  ஏரிக்கு தண்ணீர் வரத்தை  கண்காணித்து வருகிறார்கள்.

புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடி. இதில் 2632மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. சென்னை குடிநீர் தேவைக்காக 189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரிக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. ஏரிக்கு நீர் வரத்து 362 கனஅடியாக உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கனஅடி. இதில் 3135 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. 188 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

 பூண்டி ஏரியின் மொத்த கொள்ளவு 3231 மில்லியன் கனஅடி. தற்போது ஏரியில் 1872 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 160 கனஅடி தண்ணீர் வருகிறது. 545 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கனஅடியில் 587 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 105 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 12 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கனஅடியில் 441 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 30 கனஅடி தண்ணீர் வருகிறது.

சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 ஏரிகளில் 4 ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 528 ஏரிகளில் 13  ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட 93 ஏரிகளில் 7 ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் ஏரிகள் மிக வேகமாக நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 30 ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாக உத்திரமேரூர் ஏரி இருந்து வருகிறது. உத்திரமேரூர் ஏரியின்  மொத்த அடி 20 அடி அதில் 18 புள்ளி 50 அடியை தண்ணீர் எட்டியுள்ளது. ஏரியின் முழு கொள்ளளவில் 92.50 சதவீதம் தண்ணீர் எட்டி உள்ளது. உத்திரமேரூர் ஏரி 90% க்கு மேல் நிரம்பியுள்ளதால் கடல் போல் காட்சி அளித்து வருகிறது.