சென்னை: அப்பாசாமி, காசா கிராண்ட் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இன்று ஐடி சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் இன்று திமுகஅமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில்,  அப்பாசாமி ரியல் எஸ்டேட், காசாகிராண்ட் கட்டுமான நிறுவனங்களில்  வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

வரி ஏய்ப்பு புகார் காரணமாக . திருவான்மியூரில் உள்ள காசா கிராண்ட் கட்டுமான நிறுவனத்தில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அதுபோல அப்பாசாமி ரியல் எஸ்டேட்நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.  மேலும், அமைச்சர் எ.வே.வேலுவின் கீழ் இயங்கும் பொதுப்பணித்துறைக்கு,  பொருட்களை  சப்ளை செய்து வரும்  அமித் என்பவரின் வீட்டிலும் ரெய்டு நடைபெற்று வருகிறது.