டில்லி

லடாக் பகுதியில் உள்ள காக்ஜ்ங்க்கின் மேய்ச்சல் நிலம் தொடர்பாகச் சீன வீரர்கள் மற்றும் மேய்ப்பர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது

திபத் அருகே லடாக்கில் உள்ள தொலைதூர எல்லைப் பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் சீன ராணுவத்தின் ரோந்துப் பிரிவு மீது உள்ளூர் மேய்ப்பர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

சீனக் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் பிராந்தியத்தின் எல்லையான லடாக்கின் சுஷுல் பள்ளத்தாக்கில் உள்ள நியோமா கிராமத்தின் காக்ஜங் பகுதியில் ஜனவரி 2 ஆம் தேதி மோதல் நடந்ததாக உள்ளூர் மற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீன எல்லையில் உள்ள நியோமாவின் துங்டி கிராமத்தில் ரோந்துப் புள்ளி 35, 36 மற்றும் 37 இல் உள்ளூர் மேய்ப்பர்கள் குழு ஒன்று, மூன்று கவச வாகனங்களுடன் வந்த மக்கள் விடுதலை இராணுவத்தின் (பிஎல்ஏ) 12 பேர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பிஎல்ஏ வீரர்களும் மேய்ப்பர்களும் நேருக்கு நேர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கவச வாகனத்தில் வந்த சீன வீரர்கள், மேய்ப்பர்களையும் அவர்களது கால்நடைகளையும் பின்னுக்குத் தள்ளி உள்ளனர்.  சீன வீரரும் சக வீரர்களும் அந்த இடத்தை விட்டு வெளியேற முயன்றுள்ளனர்

அப்போது மேய்ப்பர்கள் சீன வீரர்களைக் கல் கொண்டு தாக்கி உள்ளனர்;  இந்த சம்பவம் எல்லைப் பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது;