சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சென்னையில் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. நாள் ஒன்றுக்கு 3,500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இந் நிலையில், கொரோனா பரவல், அதை கட்டுப்படுத்துவது குறித்து சென்னையில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணண், வருவாய்த்துறை அதிகாரி, வருவாய் நிர்வாக அதிகாரி, டிஜிபி திரிபாதி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும், பொது இடங்களில் மக்களின் நடமாட்டத்தை குறைக்கத் தேவையான நடவடிக்கை மற்றும் அத்தியாவசியமற்ற பணிகளுக்குத் தடை விதிப்பது போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.