பாஜக குற்றச்சாட்டுகளுக்கு உதயநிதி ஸ்டாலின் மறுப்பு: தேர்தல் ஆணைய நோட்டீசுக்கு பதில்

Must read

சென்னை: தேர்தல் ஆணையம் அளித்த நோட்டீசுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா சுவராஜ் மரணங்கள் பற்றி தேர்தல் பிரச்சாரத்தில் பேசியயது குறித்து இன்று மாலை 5 மணிகுள் விளக்கமளிக்குமாறு திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு, தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீசுக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது: கடந்த மார்ச் 31ம் தேதி தாராபுரத்தில் தான் பேசிய 2 வரிகளை மட்டுமே எடுத்துக் கொண்டு என் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த குற்றச்சாட்டுகளை நான் முழுமையாக மறுக்கிறேன்.

இதனை என்னுடைய இடைக்கால பதிலாக எடுத்துக்கொள்ள வேண்டும். இது குறித்து நேரடியாக விளக்கம் அளிக்க எனக்கு கால அவகாசம் தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.

More articles

Latest article