மதுரை: இன்று மதுரையில் முகாமிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், தமிழக தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தினை தொடங்கி வைத்தரார்.

முதல்வர் ஸ்டாலின் மதுரை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் இரவு பொதிகை எக்ஸ்பிரஸ் மூலம்  புறப்பட்டு சென்றார். நேற்று தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டினார். பின்னர் பிற்பகல் அங்கிரந்து கார் மூலமாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கு சென்றார். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின்னர் காரில் புறப்பட்டு நேற்று இரவு மதுரைக்குச் சென்றார்.   காரில் சென்ற அவருக்கு வழி நெடுகிலும் திமுகவினர்  உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதைங்ததொடர்ந்து,  இன்று மதுரை மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின்,  அங்கே புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் மதுரை மாநகராட்சி பொன்விழா நுழைவு வாயிலை திறந்து வைத்தார்.  தொடர்ந்து அங்குள்ள மாநகராட்சி அரங்கத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு,  தமிழகம் முழுவதும் இருக்கும் தூய்மை பணியாளர்களுக்கான மேம்பாட்டு திட்டத்தை  தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அமைச்சர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்த, தூய்மை பணியாளர்களுக்கான காலணிகள், கவச உடைகள், கையுறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் முதல்வர் வழங்கினார்.

‘30 கேள்விக்கான பதில்கள் தூய்மை பணியாளர் மேம்பாட்டிற்கான செயலி வாயிலாக சேகரித்து தகவல்களை ஒருங்கிணைப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். அவர்களின் பாதுகாப்பு, குழந்தைகளின் கல்வி, உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் தூய்மை பணியாளர் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் மதுரையில் முதல் அமைச்சர் தொடங்கிவைத்துள்ளார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக சென்னை, மதுரை, பொள்ளாச்சி, புதுக்கோட்டை, சேரன்மகாதேவியில் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது.

இதைத்தொர்ந்து,   மதுரை விமான நிலையம் அருகே அமைக்கப்பட்டு இருக்கும் அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்து உரையாற்றுகிறார் .  இந்த நிகழ்ச்சியில் மூத்த அமைச்சர்கள்,  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர்.