சென்னை: இன்று இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்க இருப்பதால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இரவு பேருந்துகள் இயங்காது என்று  அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மாண்டஸ்புயல் சென்னை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் வரும் இந்த புயலானது, இன்று நள்ளிரவு மாம்மல்புரம் அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அப்போது 65 கிமீ முதல் 85 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளத.

பயுல் காரணமாக, இன்று கனமழை முதல்  அதி கனமழையும் பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கைக்காக பல்வேறு துறைகளையும் தயார் நிலையில் இருக்க தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

அதைத்தொடர்ந்து,  சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர்,  விழுப்புரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் புயல் வீசும் என்பதால் இன்று இரவு பேருந்து சேவை அளிக்கக்கூடாது என்றும் பேருந்து நிலையங்களில் கூட்டமாக மக்கள் யாரும் நிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.