சென்னை: மாமல்லபுரத்தில் குப்பையை சுற்றி பார்க்கவா கட்டணம் வசூலிக்கப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்றம் நீதிமன்றம் மாவட்ட நிர்வாகத்துக்கு கேள்வி எழுப்பி உள்ளது.

மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களை பொதுமக்கள் காண கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அங்கு செல்லும் பக்கிங்காம் கால்வாய் பகுதி குப்பையைப் பிரிக்கும் இடமாக மாவட்ட நிர்வாகத்தால் மாற்றப்பட்டு வருகிறது. இதை  எதிர்த்து, கடந்த 2018ஆம் ஆண்டு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று  சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கின் வாதங்களைத் தொடர்ந்து,  மாமல்லபுரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் எதற்காக கட்டணம் வசூலிக்கிறீர்கள்? அங்கிருக்கும் குப்பையைக் காணவா? என்று கேள்வி எழுப்பியதோடு, மாமல்லபுரம் சுற்றுலாத் தலம் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யாத அரசு அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று காட்டமாக தெரிவித்த நீதிமன்றம், அரசின்  விதிகளை பின்பற்றாத அதிகாரிகள் மீது நடவடிககை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.