சென்னை:

மோசடி வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு பிடிவாரணன்ட் பிறப்பித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டில்லியில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்தர்

கனரா வங்கிக்கு ரூ.19.22 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக சுகேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அம்பத்தூர் கனரா வங்கியில் சுகேஷ் தனது நிறுவனத்திற்கு ரூ.19.22 கோடி அளவுக்கு கடன் வாங்கி கொண்டு திருப்பி செலுத்தவில்லை .

இந்த வழக்கில் 3வது குற்றவாளியாக சுகேஷ் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் பல முறை சம்மன் அனுப்பியும் சுகேஷ் ஆஜராகவில்லை. இதனையடுத்து அவருக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரை கைது செய்து வரும் ஜூன் 9 ம் தேதி நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது.

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் சுகேஷ் கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுகேஷ்க்கு மோசடி வழக்கில் பிடி வாரன்டட் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.