சென்னை:

தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை வெட்ட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவுப்படி தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது.

இந் நிலையில், வக்கீல் மேகநாதன் என்பவர், சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக ஐ.ஐ.டி. நிபுணர்கள் குழு அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சீமைக்கருவேல மரங்களை அகற்றிவிட்டு புதிய மரங்கள் நடப்படுவதில்லை எனவும் அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இன்று விசாரித்தார். முடிவில், சீமைகருவேல மரங்களை வெட்ட தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியும், இது தொடர்பாக ஐஐடி இயக்குநர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். வரும் மே 11ம் தேதிக்கு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.