சென்னை: தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. இடையிடையே வளிமண்டல மேலடுக்கு, கீழடுக்கு சுழற்றி போன்றவற்றால் அவ்வப்போது மழை பெய்து, வெயியின் உக்கிரத்தை வெகுவாக குறைத்து வருகிறது. தற்போது கடந்த சில நாட்களாக மீண்டும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில்,  தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.