டெல்லி: உயர்மதிப்பிலான நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்த வேண்டும் என மத்தியஅரசு பாராளுமன்றத்தில் பாஜக எம்.பி. சுசில்மோடி வலியுறுத்தி உள்ளார்.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று ராஜ்யசபாவில் பூஜ்ஜிய நேரத்தில் ரூபாய் குறித்து,  குறிப்பு மூலம் பிரச்சினையை எழுப்பிய அவர், நாட்டில் உள்ள பெரும்பாலான ஏடிஎம்களில் 2,000 ரூபாய் நோட்டுகள் காணாமல் போய்விட்டதாகவும், அவை விரைவில் செல்லாது என்ற வதந்திகள் இருப்பதாகவும் கூறினார்.

தொடர்ந்து, பேசிய பாஜக எம்.பி. சுசில்குமார் மோடி, ‘2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை 3 ஆண்டுகளுக்கு முன் ரிசர்வ் வங்கி நிறுத்தி விட்டது என்று கூறியவர், “இது குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும்.  உயர்மதிப்பிலான நோட்டுக்கள் மக்கள் அதை பதுக்கி வைத்திருப்பதாகவும், அதை பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் கருப்புப் பணத்திற்கு பயன்படுத்தப்படுவதாகவும் தகவல் உள்ளது என்று குற்றம் சாட்டியதுடன், அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஜப்பான் போன்ற பெரிய வளர்ந்த பொருளாதாரங்களைப் பார்த்தால், அவர்களிடம் 100க்கு மேல் கரன்சி இல்லை. எனவே மத்திய அரசு இதைப் பற்றி சிந்தித்து படிப்படியாக தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், 2,000 ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கும் குடிமக்கள் அதை டெபாசிட் செய்ய இரண்டு ஆண்டுகள் அவகாசம் வேண்டும் என்றும் கூறினார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, . பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை அரசு இரவோடு இரவாக பணமதிப்பு நீக்கம் செய்த போது, புதிய 500 ரூபாய் நோட்டுடன் 2,000 ரூபாய் கரன்சி நோட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. 1,000 ரூபாய் நோட்டு புழக்கத்தை நிறுத்திய போது 2,000 ரூபாய் நோட்டை கொண்டு வருவதில் எந்த தர்க்கமும் இல்லை என்று கூறிய அவர், அதிக மதிப்புள்ள கரன்சி நோட்டுகள் இல்லாத வளர்ந்த நாடுகளின் உதாரணங்களை எடுத்துரைத்தார்.