டில்லி:

ரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நாளை டில்லியில் காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகத்துக்கு உத்தரவிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

காவிரி நதி நீர் விவகாரத்தில் உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழுவை மத்திய அரசு கடந்த ஆண்டு அமைத்தது. இதுகுறித்து அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து  கடந்த ஆண்டு ஜூலை 2ந்தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ஆணையத்தின் தலைவர், மசூத் உசேன் தலைமையில் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநில அரசு பிரதிகளுடன் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கூட்டங்கள் நடைபெற்ற வந்த நிலையில், நாளை மீண்டும்  காவிரி ஒழுக்காற்றுக்குழு முதல் கூட்டம்  நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி, கேரள மாநிலங்கள் சார்பாக பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதைத்தொடர்ந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுவது குறித்து முடிவெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இதைத்தொடர்ந்து, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.