டெல்லி: மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வரும் 11ந்தேதி காவிரி மேலாண்மை கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.  அதற்குள் அணை கட்டுவதற்கான ஆய்வு பணிகளை முடிக்க கர்நாடக மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.

காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில்  அணை கட்ட கர்நாடக மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறத. இதற்கு  தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருந்தாலும், தற்போது கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் மாநில அரசு, அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு திமுக அரசு நேரடியாக எதிர்ப்பு தெரிவிக்காமல், மத்தியஅரசை வலியுறுத்தி வருகிறது. இந்த விஷயத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இதற்கிடையில், மேகதாது அணை கட்டுவதற்கான ஆய்வுபணிகளை கர்நாடக அரசு முடுக்கி விட்டுள்ளது. அதற்கான கூடுதலாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அணையின் எல்கை உள்பட பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேகதாவில் அணை கட்ட வனப்பகுதியில் 2 கி.மீ தூரத்திற்கான ஆய்வை கர்நாடகா அரசு நிறைவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வானிலை சாதகமாக இருந்தால் 60 நாளில் கணக்கெடுப்பு பணி முடியும் என கர்நாடகா அதிகாரிகள் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேகதாது அணைக்கான எல்லையை குறிக்க 20 மீட்டருக்கு ஒரு மர துண்டுகளை கர்நாடக வனத்துறை நட்டு வைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22வது கூட்டம் ஆகஸ்டு 11ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில், காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு போதிய அளவு தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடாமல் இருக்கும் நிலையில், இரு மாநிலங்களுக்கு இடையான நதிநீர் பங்கீடு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

அதே வேளையில் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகா காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தற்போது நான் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேகதாது பகுதியில் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு பணிகளை ஆய்வு செய்து 20 மீட்டர் தூரத்திற்கு ஒரு மரக்கட்டை வீதம் அடையாளத்தை பதிவு செய்து தற்போது முதற்கட்ட பணிகளை கர்நாடக அரசு ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.