பி எஸ் என் எல் விரைவில் 5 ஜி சேவையை தொடங்கும் : 700 MHz பேண்டுக்கு அனுமதி கோரி உள்ளது

டில்லி

பி எஸ் என் எல் நிறுவனம் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக 700 மெகா ஹெட்ஸ் சேவைக்கு அனுமதி கோரி உள்ளது.

இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க 2ஜி என்பது 3ஜி ஆகி இப்போது 4ஜி ஆகி உள்ளது.  ஆனால் இன்னும் வேகத்துக்கு 5ஜி தொழில்நுட்பம் தேவையாக உள்ளது.  இதனால் பி எஸ் என் எல் நிறுவனம் 700 மெகாஹெட்ஸ் சேவைக்கு அனுமதி கோரியுள்ளது.  இந்த அலைவரிசையில் தற்போது காலியாக உள்ள ஆறு இடங்களில் ஒன்றை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து சீன இணைப்பு உற்பத்தியாளர் ZTE உடன் பி.எஸ்.என்.எல்  ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட உள்ளது.  இதன் மூலம் தொழில்நுட்பம் மேம்படுத்தப் பட்டு இணைய வேகம் 10 ஜிபிபிஎஸ் க்கு உயர்த்தப்படும்.  இது தவிர நோக்கியா நிறுவனத்துடனும் 5ஜி குறித்து ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது.

இதேபோல் பாரதி ஏர்டெல் நிறுவனமும் விரைவில் 5ஜி சேவை தொடங்க ஆயத்தும் செய்துக் கொண்டு வருகிறது.  பாரதி ஏர் டெல் நிறுவனத்தின் சேர்மன் சுனில் மிட்டல் விரைவில் வெளிநாட்டு நிறுவனங்கள் உதவியுடன் இந்த சேவை தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த 5ஜி சேவையை அளிக்க அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் கொரியா நாடுகளும் இந்தியாவைப் போலவே முயற்சிகள் எடுத்துள்ளன.
English Summary
BSNL applied for 700 MHz to offer 4g and 5g services soon