சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ‘பாரதரத்னா’ விருது வழங்க  சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், திருச்சியை தமிழ்நாட்டின் 2வது தலைநகராக்க வேண்டும் என்றும்  திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் வலியுறுத்தினார்.

மறைந்த முன்னாள் முதல்வருடன் இனிகோ இருதயராஜ்

தமிழக 16வது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டமானது, ஜூன் 21-ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் உரையுடன தொடங்கியது. 24ந்தேதி வரை நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தொடரில் நேற்று முதல் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. இன்று 2வது நாளாக  விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இன்றைய விவாதத்தின்போது,   திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் பேசுகையில், தொடர்ந்து, சிறுபான்மையினரின் நலன் காத்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும்,  “தமிழகத்தில் நேர்மையான, திறமையான அதிகாரிகளைத் தன் சிறப்புச் செயலாளர்களாக நியமித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு சீரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தி மக்களின் வாழ்வைக் காத்து தமிழ் தேசத்தின் தந்தையாக முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்”  என புகழ்ந்தார்.

ஆளுநர் உரை வித்தியாசமானது. வார்த்தை அலங்காரம் இல்லாத உரையாக ஆளுநர் உரை உள்ளது. அதிமுக ஆட்சியில்  கடந்த பத்து வருடமாக வடமாநிலத்தவர்க்கு வேலை வாய்ப்பை அளித்து தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு பறிக்கப்பட்ட நிலையில் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்தவர் முதலமைச்சர்.  இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிநாதமாக இருக்கக்கூடிய அரசு கலைஞர் அவர்கள் காட்டிய பாதையில் வீறுநடை போட்ட செயல்பட்டு வருகிறது.

மேலும், திருச்சியைத் தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் எனவும், இனிகோ இருதயராஜ் கோரிக்கை விடுத்தார்.  தமிழகத்தின் நடுப்பகுதி, என்பதாலும் அனைத்து வசதிகளும் இருக்கும் இடமான திருச்சி மாநகரகத்தை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக இருக்க வேண்டும். சென்னையில் மக்கள் தொகை பெருகிவரும் நிலையில் இட நெருக்கடியை கருத்தில் கொண்டு திருச்சியை இரண்டாவது தலைநகரமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

திருச்சி கிழக்கு மிக பெரிய தொழிற்சாலை அமைக்க தமிழ்நாடு முதலமைச்சருக்கு கேரிக்கை விடுக்கிறேன். திருச்சி காந்தி மார்கெட் விரிவாகம் செய்ய வேண்டும். காந்தி மார்கெட் அருகில் 14.28 ஏக்கர் பெண்கள் சிறைசாலை வேறு இடத்திற்கு காந்தி மார்கெட் நவீன கிடங்குகள் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.