சென்னை: திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது தேர்தல் வாக்குப்பதிவு, வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டறிந்தார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து வரும் மே 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், ஏப்ரல் 29ந்தேதி அன்று இரவு வெளியான தேர்தலுக்கு பிந்தைய வாக்குப்பதிவில், திமுகவே ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான ஊடகங்கள் கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளன.இதனால், திமுகவினர் உற்சாகமாக உள்ளனர்.
இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயம் வந்த முதல்வர் ஸ்டாலின், அங்கு மூத்த அமைச்சர்கள், மற்று2ம் கட்சி திமுக நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அப்போது, தேர்தல் வெற்றி வாய்ப்பு பற்றி முகேட்டறிந்தார். மேலும், வாக்கு எண்ணிக்கை முடியும் வரை கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்
[youtube-feed feed=1]