சென்னை: நாளை (மே 1)  முதல் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் cmrl பயண அட்டைகளை பயன்படுத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிங்கார சென்னை அட்டையை மட்டுமே பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மெட்ரோ பயனர்கள்,  தங்களிடம் உள்ள  cmrl பயண அட்டைகளை சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒப்படைத்துவிட்டு, புதிய  சிங்கார சென்னை அட்டையை  பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

‘சென்னை மெட்ரோ ரயில்களில் மே 1, 2026 முதல் பழைய பயண அட்டைகள் (Travel Cards) முழுமையாக நிறுத்தப்பட்டு, சிங்கார சென்னை அட்டை (National Common Mobility Card – NCMC) முறை கட்டாயமாக்கப்படுகிறது. பயணிகள் தங்கள் பழைய அட்டையில் உள்ள மீதமுள்ள தொகையை, புதிய சிங்கார சென்னை அட்டைக்கோ அல்லது மெட்ரோவின் மொபைல் செயலி மூலமாகவோ மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிக்க cmrl பயண அட்டையுடன் கூடுதலாக கடந்த 2023ம் ஆண்டு முதல் சிங்கார சென்னை என்ற தேசிய பொது போக்குவரத்து அட்டையை அறிமுகப்படுத்தியது. பின்னர் இது மேம்படுத்தப்பட்டு, புறநகர் மின்சார ரயில் மற்றும் சென்னை மாநகர பேருந்துகளுக்கும் பொருந்தும் வகையில் மேம்படுத்தப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. அதனால், சிங்கார சென்னை அட்டைக்கு பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதன் காரணமாக, இந்த அட்டை மூலம் வெளி மாவட்ட பயணங்களுக்கும்  பயணிக்கும் வகையில் மேம்படுத்தும் பணிகளை தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருகிறது.

இந்த நிலையில்,  சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் நாளை (மே 1ந்தேதி, 2026) று முதல் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சிங்கார சென்னை என்ற தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு முழுமையாக மாறி உள்ளது. அதன்படி 41 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் cmrl மெட்ரோ பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி  நிறுத்தப்பட்டது.

பயணிகள் தங்களிடம் உள்ள  cmrl மெட்ரோ பயண அட்டையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயணச்சீட்டு கவுண்டர்களில் ஒப்படைத்து விட்டு இதற்கு பதிலாக, பயணிகள் சிங்கார சென்னை என்ற தேசிய பொது போக்குவரத்து அட்டையை எவ்வித கட்டணமும் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம். பழைய பயண அட்டையின் வைப்புத்தொகை மற்றும் மீதமுள்ள தொகை புதிய அட்டைக்கு மாற்றி கொண்டு பயணிகள் தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம்

இவ்வாறு மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

[youtube-feed feed=1]