திருபுவனம்: கீழடி 11ம் கட்ட அகழாய்வில் வெளிப்பட்ட செங்கல் கட்டுமானம் மற்றும் தொடர்ச்சியாக சாய கிண்ணங்கள் கண்டெடுக்கப்பட்டு வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே உள்ள கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இந்த அகழ்வாய்வில், சுமார் பத்தாண்டு கால காத்திருப்பிற்கு பின் செங்கல் கட்டுமானத்தின் தொடர்ச்சி இரண்டரை மீட்டர் ஆழத்தில் கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து, சாயக்கிண்ணங்களும் கிடைத்துள்ளது தொல்லியல் ஆய்வாளர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுததி உள்ளது.

கடந்த 2014 — 15ம் ஆண்டுகளில், கீழடி பகுதியில், மத்திய தொல்லியல் துறை வைகை நதிக்கரை நாகரீகம் குறித்த அகழாய்வை தொடங்கியது. அதன் விளைவாக, 2015 — 16ல் மிகப்பெரிய செங்கல் கட்டுமானம் கண்டறியப்பட்டது. தொழிற்சாலை போன்று காணப்பட்ட செங்கல் கட்டுமானம் சிந்து சமவெளி நாகரீகத்தை ஒட்டியதாக கருதப்பட்டது. செங்கல் கட்டுமானம் தமிழக வரலாற்றில் ஆதாரமாக விளங்கியது.
அதன்பின் தமிழக தொல்லியல் துறை அடுத்தடுத்து, கீழடி, அகரம், கொந்தகை ஆகிய இடங்களில் அகழாய்வை நடத்தி ஏராளமான பொருட்களை கண்டறிந்தது.
ஆனால் 2ம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய செங்கல் கட்டுமானத்தின் தொடர்ச்சி காணப்படவில்லை என்ற நிலையில் அதை கண்டறிய தமிழக தொல்லியல் துறை பல்வேறு முயற்சி எடுத்து வந்தது. இதுவரை 10 கட்ட அகழ்வாய்வுகள் முடிந்துள்ளது. அப்போது தமிழர்களின் வியத்தகு வாழ்வியல் முறை தெரிய வந்துருள்ளது.
இந்த அகழ்வாய்வில், 2,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழங்கால மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன. இது தமிழர்களின் பாரம்பரியத்தையும், பழங்கால நாகரிகத்தையும், தமிழரின் வீரத்தையும் பறை சாற்றும் வகையில் அமைந்துள்ளது.
இந்த பொருட்கள் கீழடி அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை தமிழக அரசின் தொல்லியல் துறை பராமரித்து வருகிறது.
குறிப்பாக, 2014-15- ஆம் ஆண்டுகளில்( ‘Archaeological Survey of India’) ஆர்க்கிலாஜிக்கள் சர்வே ஆப் இந்தியா வைகை நதிக்கரை நாகரிகத்தை ஆய்வு செய்ய தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக 2015-16- ஆம் ஆண்டில் மிகப்பெரிய செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு ‘Indus Valley Civilization’-ஐ ஒத்த கட்டுமானமாக இருப்பதால், தமிழகத்தின் தொன்மை வரலாற்றிற்கு முக்கிய ஆதாரமாக அமைந்தது.
பின்னர் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை கீழடி, அகரம், கொந்தகை பகுதிகளில் தொடர்ந்து அகழாய்வுகளை மேற்கொண்டு பல்வேறு பழமையான பொருட்களை கண்டறிந்தது. இருப்பினும், இரண்டாம் கட்டத்தில் கண்டறியப்பட்ட செங்கல் கட்டுமானத்தின் முழு தொடர்ச்சியை உறுதிப்படுத்த பல ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், 11ம் கட்ட அகழ்வாய்வு மார்ச் 18ல் தொடங்கியது. கீழடியில், ஏற்கனவே செங்கல் கட்டுமானம் கண்டறியப்பட்ட இடம் அருகில் உள்ள கஜேந்திரன் என்பவரது இடத்தில் நடைபெற்றது. முதலில் இரண்டு குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு செய்யப்பட்டபோது, செங்கல் கட்டுமானம், சாய கிண்ணம், சரிந்த கூரை ஓடுகள் கண்டறியப்பட்டன.
முதல் குழியில் இரண்டரை மீட்டர் ஆழத்தில் எட்டு அடுக்குகள் கொண்ட செங்கல் கட்டுமானம் வெளிப்பட தொடங்கியது. இதன் அருகிலேயே மேற்கூரைக்காக கம்பு ஊன்ற தொடர்ச்சியாக தோண்டப்பட்ட 13 குழிகளும் கண்டறியப்பட்டுள்ளது. 2ம் கட்ட அகழாய்வின் தொடர்ச்சியாக கருதப்படும் இந்த செங்கல் கட்டுமானத்தில் ஒரே மாதிரியான செங்கற்கள் இல்லாமல் மூன்று வித வடிவ செங்கற்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளதும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல் கட்டுமானத்தின் தொடர்ச்சி தெற்கு பகுதி நோக்கி திரும்புவதால் அந்த பக்கமும் அகழாய்வு பணிகளை தொல்லியல் துறையினர் தொடங்கியுள்ளனர். இது வரை மொத்தம் ஆறு குழிகள் தோண்டப்பட்டுள்ளன. கீழடி மிகப்பெரிய நகரமாக இருந்திருப்பதற்கான ஆதாரம் முழுமையாக கிடைக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் துறையினர் கருதுகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக சாய கிண்ணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 10-க்கும் மேற்பட்ட கிண்ணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், இவை செங்கல் கட்டுமானத்தின் உட்புறம் காணப்படுவதால், இப்பகுதியில் பண்டைய காலத்தில் சாயத் தொழிற்சாலை செயல்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், தலைமையில் தொல்லியல் துறை மாணவ, மாணவியர்கள் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
[youtube-feed feed=1]