சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ள விஜய்-ன் தவெக வெற்றிபெற வேண்டி கோயில் கோயிலாக சுற்றி வரும் நடிகர் விஜய், ஏற்கனவே புகழ்பெற்ற திருச்செந்தூர் கோவில், ஷீரடி சாய்பாபா கோவில்களுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனை செய்த நிலையில், அடுத்து நாகை தரகா, வேளாங்கண்ணி மாதாவை தரிச்சிக்க தயாராகி வருகிறார்.

தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என  கோவில் கோவிலாக சென்று பிரார்த்தனை செய்து வருகிறார்.

 தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கி உள்ள நடிகர் விஜயின் தவெக கட்சி, தேர்தலில் வெற்றிபெறுவது கடினம் என எக்சிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன. இருந்தால், தேர்தல் ஆணையம்  வாக்கு எண்ணிக்கையை மே 4ந்தேதி நடத்த உள்ளது.

இந்த நிலையில்,  விஜய் தனது தேர்தல் வெற்றிக்காகவும், கட்சி ரீதியான தடைகளை கடப்பதற்காகவும் ஆன்மீக பயணங்களை மேற்கொண்டு வருகிறார்  கடந்த  மார்ச் 28-ந்தேதி அதிகாலையில் விஜய் திருச்செந்தூர் முருகன் கோவிலில் அதிகாலையில், முருகனின் விஸ்வரூப தரிசனத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் சண்முகர், வள்ளி, தெய்வானை, தட்சிணாமூர்த்தி, பெருமாள் சன்னதிகளுக்கும் சென்று தரிசனம் செய்தார். சூரசம்ஹாரமூர்த்தி சன்னதிக்கும் சென்று வழிபட்டார்.

இதைத்தொடர்ந்து சென்னை திரும்பிய விஜய் நேற்று மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். இதற்காக விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சீரடி சென்றார். அங்கு சாய்பாபாவை, விஜய் தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்ததும்  மாலையே  அன்று சென்னை திரும்பினார்.

இந்த நிலையில், அடுத்ததாக தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஸ்தலங்களில் ஒன்றான  அன்னை வேளாங்கண்ணி மாதா பேராலயம் மற்றும் ந கப்பட்டினம் அருகே உள்ள நாகூர் தர்காவுக்கு புனித பயணம் மேற்கொள்ள இருப்பதாக ‘ தகவல்கள் வெளியாகி உள்ளது.

மே 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், மே   2-ந்தேதி விஜய் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு செல்கிறார். அதனை தொடர்ந்து நாகூர் தர்காவுக்கும் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

[youtube-feed feed=1]