ராமேஸ்வரம்:
மீன்கள் இனப்பெருக்கத்திற்காக 61 நாட்கள் மீன்பிடிக்க தடை காலம் துவங்கியது.

மீன்கள் இனப்பெருக்கம், கடல் வளம் காத்திட கோடை காலமான ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. வங்க கடல், பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க அனுமதியில்லை.

இன்று முதல் தடை காலம் துவங்குவதால், நேற்று மீனவர்கள் படகில் இருந்த மீன்பிடி வலைகள், பேட்டரிகள், தளவாட பொருட்களை கடற்கரையில் இறக்கி வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.