சென்னை:
லகம் முழுவதும் இன்று புனித வெள்ளி இன்று கடைபிடிக்கப்படுகிறது.

சென்னையில் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற உள்ளது.

புனித வெள்ளி, என்பது ஒரு துக்க நாள். கல்வாரி மலையில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள். புனித வெள்ளி இயேசு மீண்டும் உயிர்பெற்றெழுந்த தினமான ஈஸ்டர் ஞாயிறுக்கு முந்தைய வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.

இன்று காலை முதல் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும். முன்னதாக நேற்று மாலை ஆலயங்களில் பெரிய வியாழன் நிகழ்வு கடைபிடிக்கப்பட்டது. சென்னையில் சாந்தோம் பசிலிகா, பெசன்ட் நகர் வேளாங்கண்ணி தேவாலயம், ஜெமினி கதீட்ரல் தேவாலயம், ராயப்பேட்டை வெஸ்லி தேவாலயம், பெரம்பூர் லூர்து மாதா தேவாலயம், வேப்பேரி செயின்ட் பால் தேவாலயம், பெரவள்ளூர் உயிர்த்த கிறிஸ்து ஆலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.