நடிகர் சங்கத்தில் இருந்து விலகுகிறேன்: சிம்பு அதிரடி

Must read

simbu
நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் தலைமையிலான அணிக்கும், நாசர் தலைமையிலான அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும். பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் வெற்றிபெற்றார்கள். துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சிம்பு தோல்வி அடைந்தார். சமீபத்தில் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சியிலும் சிம்பு பங்கேற்கவில்லை.
இந்நிலையில், நடிகர் சிம்பு அளித்துள்ள பேட்டி ஒன்றில், ’’பல்வேறு காரணங்களை முன்வைத்து நடிகர் சங்கத்தை விட்டு விலகுகிறேன். நடிகர்களுக்குப் பிரச்னைகள் ஏற்படும்போது உதவக்கூடிய அமைப்பான நடிகர் சங்கம் தோல்வி அடைந்துள்ளது. நான் பிரச்னைகளைச் சந்தித்தபோது நடிகர் சங்கத்திடமிருந்து எனக்கு எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. சமீபத்தில் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சியும் என்னை காயப்படுத்தியுள்ளது. பெரும்பாலான நடிகர்கள் ஜோக்கர்களாகச் சித்தரிக்கப்பட்டார்கள்’’ என்று கூறியுள்ளார்.

More articles

Latest article