அதிசயம் : விமானப் பயணியின் லக்கேஜ் ஒரே ஒரு கேன் பியர்

மெல்போர்ன்

ரு விமானப் பயணி தனது லக்கேஜாக ஒரே  ஒரு கேன் பியரை எடுத்து வந்தது அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.

டீன் சின்ஸ்டன் என்னும் ஆஸ்திரேலிய பயணி ஒருவர் விமானப் பயணத்தில் தனது லக்கேஜாக ஒரு கேன் பியரை புக் செய்துள்ளார்.  அந்த உள்நாட்டுப் பயண விமானத்தில் புக் செய்யப்பட்ட அந்த லக்கேஜ் (!) நான்கு மணி நேரப் பயணத்துக்குப் பின் பத்திரமாக கிடைக்கப் பட்டுள்ளது.

 

டீன் இது பற்றி தெரிவிக்கையில் தானும் தனது நண்பனும் சேர்ந்து இது போல லக்கேஜ் புக் செய்ய திட்டமிட்டதாகவும்,  அனைவரையும் சிரிக்கை வைக்கவே இதை செய்ததாகவும் கூறி உள்ளார்.

மேலும், “எனது ஒரே லக்கேஜான பியர் கேன் பத்திரமாக வந்து சேர்ந்தது ஒரு ஆச்சரியமான விஷயம்.  இந்த லக்கேஜை கன்வேயர் பெல்டில் பார்த்தவர்கள் அனைவரும் சிரித்து மகிழ்ந்ததே எனக்கும் மகிழ்ச்சியை உண்டாக்கியது எனக் கூறியுள்ளார்


English Summary
Australian passenger booked as his only luggage a tin of beer