ஆம்ஸ்டர்ம் :

தனது நாட்டில் உள்ள சிறைச்சாலைகளை பிற நாடுகளுக்கு வாடகைக்கு விட்டிருக்கிறது நெதர்லாந்து அரசு.

ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் குற்றச்செயல்களில் ஈடுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே. ஆகவே  அந்நாட்டில் உள்ள பெரும்பாலான  சிறைச்சாலைகள்  கைதிகள் யாருமின்றி காலியாக இருக்கின்றன.  இதனால், சிறைச்சாலைகளை வேறு பல பணிகளுக்கு அந்நாட்டு ரசு பயன்படுத்தி வருகின்றது. பெண்கள் சிறைச்சாலை ஒன்று, தற்போது உணவு விடுதியாக  மாற்றப்பட்டுள்ளது.

அதே போல அங்குள்ள  பிரேடா சிறைச்சாலையில் கிட்டத்தட்ட 90 அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலகங்கள் செயல்பட்டு வருகன்றன.

மேலும் 27 சிறைச்சாலைக்கள் மூடப்பட்டுவிட்டன.  அவற்றில் ஆறு  சிறைச்சாலைகள் 17 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளன.

அது மட்டுமல்ல..  ஒரு சிறைச்சாலை,  நார்வே நாட்டுக்கு வாடைக்கு விடப்பட்டிருக்கிறது. அங்கு நார்வே  கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இப்படியும் ஒரு நாடு!https://patrikai.com/special-for-sasikala-privilege-in-prison-rs-2-crore-bribe-for-dgp-prison-officer-report/