கொரோனா: கோவிட்-19 தடுப்பு மருந்து – பந்தயத்தில் முந்தும் அஸ்ட்ராஜெனிகா – WHO தலைமை விஞ்ஞானி

Must read

உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் ஜூன் 26 அன்று பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது, அஸ்ட்ராஜெனிகாவின் COVID-19 தடுப்பு மருந்து தற்போதைய நிலையில் சோதனைகள் மற்றும் தயாரிப்பு அடிப்படையில் உலகின் முன்னணியில் உள்ளதாக  கூறினார்.

இதுவரை அறிக்கையிடப்பட்டுள்ள 200 க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகளில்,  சுமார் 15  மருந்துகள் மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்கியுள்ளன என்றாலும், மாடர்னாவின் கோவிட் -19 தடுப்பு மருந்து மற்றவர்ககளை முந்தினாலும், அஸ்ட்ராஜெனிகாவின் தயாரிப்புடன் ஒப்பிடும் போது சற்றே பின்தங்கி இரண்டாம் இடத்தில் உள்ளதை குறிக்கும் வகையில் “மாடர்னா மிகவும் பின்தங்கி விடவில்லை” என்று சௌமியா சுவாமிநாதன் கூறினார்.

சாத்தியமான தடுப்பு மருந்துகள் குறித்து WHO சினோவாக் உட்பட பல சீன மருத்துவ ஆய்வு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று கூறினார். ஒரு செய்தி மாநாட்டில் பேசிய சுவாமிநாதன், COVID-19 தடுப்பு மருந்து சோதனைகளில் ஒத்துழைப்பது குறித்து பரிசீலிக்க அனைத்து நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்தார். இது WHO இன் சிகிச்சைக்கான புதிய மருந்து பொருட்களுக்கு நிகழ்த்தும் சோதனைகளைப் போன்றே, தடுப்பு மருந்துகளுக்கும் நிகழ்த்தும் ஒத்த சோதனைகள் ஆகும்.

தமிழில்: லயா

More articles

Latest article