உலகெங்கும் கொரோனா வைரஸ் பரவ சீனா தான் காரணம் என்ற பேச்சு மீண்டும் தீவிரமடைந்திருக்கும் நிலையில், வெளிநாடுகள் சீனா மீது தடை விதிக்கும் பட்சத்தில் அதிலிருந்து காத்துக்கொள்ள புதிய சட்டம் ஒன்றை அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது சீனா.

சட்ட திருத்த மசோதாவில் திருத்தங்கள் இருக்கும் பட்சத்தில் அதிபரின் ஒப்புதலுக்கு முன் பொதுவாக மூன்று முறை ஆய்வு செய்யப்படும், ஆட்சேபனை ஏதும் இல்லாத நிலையில், இரண்டு முறை ஆய்வுக்குப் பின் ஒப்புதல் அளிக்கப்படும்.

சீன வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சீனர்களை பாதிக்காத வகையில் இயற்றப்பட்டுள்ள இந்த சட்ட மசோதா தற்போது இரண்டாவது கட்ட ஆய்வுக்கு சென்றுள்ளது.

மற்றொரு புறம், சீன நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு தடை விதிப்பது குறித்து அமெரிக்க அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

தகவல் தொழில்நுட்பம் முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் வரை அனைத்திலும் சீன தயாரிப்புகள் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளை ஆக்கிரமித்திருக்கும் நிலையில், தங்கள் நாட்டின் மீது தேவையற்ற விமர்சனங்களை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்டு வருவதாகவும், அதனால் தங்கள் நாட்டை சேர்ந்த வணிக நிறுவனங்களை பாதுகாக்கவே இந்த நடவடிக்கை என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள் :

வுஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் வெளியேறியது எப்படி…. அதிர்ச்சி ரிப்போர்ட்

சீனாவின் வுஹான் ஆய்வக மர்மம் உடைந்தது…. கொரோனா வைரஸ் பரவல் குறித்த புலணாய்வில் தரவு விஞ்ஞானிகளின் சாதனை

வெளிநாடுகள் சீனா மீது தடை விதிக்கும் பட்சத்தில் பிற நாட்டுகளில் சீன அரசு செய்திருக்கும் முதலீட்டு திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகிலேயே இதுபோன்று ஒரு சட்டம் இயற்ற இருப்பது இதுவே முதல் முறை என்பதால் இதனால் சீனர்களுக்கு என்ன நன்மை ஏற்படும் என்பது இந்த சட்டம் குறித்த முழுவிவரங்கள் வெளியான பின்பே தெரியவரும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.