டில்லி

மிழக மாநில பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மிழகத்தின் மாநில பாஜக தலைவராகத் தமிழிசை சௌந்தரராஜன் பதவி வகித்து வந்தார்.  கடந்த 2019 ஆம் ஆண்டு அவர் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதால் பதவி விலகினார்.  பிறகு எல் முருகன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.

முருகன் தலைவராக இருந்த போது பாஜகவைத் தமிழகத்தில் பிரபலப்படுத்தப் பல முயற்சிகள் மேற்கொண்டார்.   நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட முருகன் திமுகவிடம் தோல்வி அடைந்தார்.

நேற்று மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதால் தமிழக பாஜக தலைவர் பதவி காலியானது. இன்று தமிழக பாஜக தலைவராக முன்னாள் ஐ பி எஸ் அதிகாரி கே அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார் என பாஜக தேசிய தலைவர் நட்டா அறிவித்துள்ளார்.