நடிகை அமலாபால் தனது 32 வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.

இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அவரது நெருங்கிய நண்பரான ஜகத் தேசாய், அமலாபாலிடம் தனது காதலை வெளிப்படுத்தினார்.

இதனை சற்றும் எதிர்பாராத அமலாபால், ஜகத் தேசாய் கொடுத்த மோதிரத்துக்கு மாற்றாக அவருக்கு முத்தம் கொடுத்து மோதிரத்தை அணிவிக்க சொல்லி அவரது காதலை ஏற்றுக்கொண்டார்.

அமலாபால் தனது காதலை ஏற்றுக்கொண்டதை தனது சமூகவலைத்தள பக்கத்தில் வீடியோ உடன் பதிவிட்டுள்ளார் ஜகத் தேசாய்.

ஜகத் தேசாய்க்கு காதல் ரசம் சொட்ட சொட்ட அமலாபால் முத்தமழை பொழியும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருவதை அடுத்து அமலாபால் விரைவில் திருமணம் செய்துகொள்வார் என்று கூறப்படுகிறது.