சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் 2021ம் ஆண்டு ஓடிடி-யில் வெளியானது.

இந்தப் படத்தில் நடித்த சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது உட்பட மொத்தம் 6 விருதுகள் கிடைத்தன.

இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் இணைந்துள்ள இந்த கூட்டணி தனது அடுத்த படத்தின் பெயரை இன்று அறிவித்துள்ளது.

சூர்யாவின் 43வது படமான இந்த படத்திற்குப் புறநானூறு என்று பெயரிடப்பட்டுள்ளது.

2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

துல்கர் சல்மான், நஸ்ரியா ஆகியோர் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.