நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அர்ஜூனுக்கும் குணச்சித்திர நடிகர் தம்பி ராமைய்யா மகன் உமாபதிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ஐஸ்வர்யா மற்றும் உமாபதி இருவரும் காதலித்து வந்த நிலையில் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க இருவரின் பெற்றோரும் முடிவெடுத்தனர்.

இதனையடுத்து சென்னை போரூரை அடுத்த கெருகம்பாக்கத்தில் நடிகர் அர்ஜுன் கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இன்று வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் இவர்களின் திருமணம் வரும் தை மாதம் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.