பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து இந்தப் படம் வரும் ஜனவரி 26 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதனைத் தொடர்ந்து பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா போன்ற படங்களை இயக்கிய எஸ்.யு. அருண் குமார் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் விக்ரம்.

விக்ரம் 62 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தை ரியா ஷிபு தயாரித்துள்ளார்.

விக்ரம் 62 படத்தின் ப்ரோமோ வீடியோ இன்று வெளியாகி உள்ளது.