சென்னை

மிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு தினமான ஏப்ரல் 6 அன்று அனைத்து நிறுவன பணியாளர்களுக்கும் விடுமுறை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.   பதிவான வாக்குகள் மே மாதம் 2 ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.  மாநிலம் எங்கும் தேர்தல் பணிகளை அனைத்து கட்சியினரும் தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக தொழிலாளர் ஆணையர் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார்.  அதில், “வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எல்லோரும் வாக்களிக்க வேண்டும் இதை மனதில் கொண்டு அன்று அனைவருக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என உத்தரவிடுகிறேன்.

1951 ஆம் வருட மக்கல் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 135 பி அடிப்படையில் அனைத்து நிறுவனப் பணியாளர்களுக்கும் தேர்தல் நாளில் விடுமுறை அளிக்க வேண்டும்.  எனவே அன்று தினக்கூலி, தற்காலிகம், ஒப்பந்தம் உட்பட அனைத்து பிரிவினருக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.