சென்னை: அதிமுக தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்து, 51ம் ஆண்டு தொடங்குவதை அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடினர். எடப்பாடி பழனிச்சாமி, கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளுக் குமாலை அணிவித்தார். ஆனால், ஓபிஎஸ், எடப்பாடி தரப்பினரின் நடவடிக்கை தனக்கு மனதில் வலி ஏற்படுத்துகிறது என தெரிவித்து உள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அக்டோபர் 17, 1972இல் தொடங்கிய அதிமுக கட்சி தற்போது 50 ஆண்டை நிறைவு செய்து 51வது ஆண்டில் அடியெடுத்துள்ளது. 51வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலையமைகத்தில் மறைந்த மூத்த தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல் கட்சித் தொண்டர்களுக்கு அவர் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். இதேபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிமுகவினர் அக்கட்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்

முன்னதாக இன்று நடைபெற்ற சட்டப்பேரவை முதல் நாள் கூட்டத்தொடரில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரான இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 61 பேர் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் ஒபிஎஸ் சட்டப்பேரவையில் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், சட்ட பேரவைக்கு வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளோம்  என்றதுடன், சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை முழு மனதோடு ஏற்கிறோம் என்றார்.

பின்னர் எடப்படி தரப்பு குறித்து கூறும் போது,  எடப்பாடி தரப்பினர், அதிமுகவில் சட்டவிதிகளை மாற்றுவது அபாயகரமானது. பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட நிபந்தனைகள் விதித்து இருப்பது எம்.ஜி.ஆர் மனதில் வலி ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.