புதுச்சேரி:

புதுச்சேரி நாடாளுமன்றவேட்பாளர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வைத்திலிங்கம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் திமுக வேட்பாளரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார். பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது, தேர்தலுக்கு பிறகு மத்திய அரசிலும், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கூறினார். தொடர்ந்து பேசியவர்,  அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக ஆட்சி நடத்தி வருவதாக குற்றம் சாட்டியவர்,  நாட்டின் உயர்ந்த அமைப்புகளான,  தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, வருமான வரித்துறை சுதந்திரமாகச் செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு என்று குற்றம் சாட்டினார்.

ஆதரிக்கும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மாநில அந்தஸ்து தரப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பாரதிய ஜனதா கட்சி அதுகுறித்து தேர்தல் அறிக்கையில் ஏதும் தெரிவிக்கவில்லை என்று பேசியவர்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது புதுச்சேரி மாநில அந்தஸ்துக்குப் பாடுபடும் என்றார்.

முன்னாள் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை துரோகி என்று ஜெயலலிதா பிரச்சாரம் செய்ததை நினைவுபடுத்திய முத்தரசன், அவர் ஆட்சிக்கு வர உழைத்த தோழமைக் கட்சியான அதிமுகவுக்கு துரோகம் இழைத்ததால் என்.ஆர்.காங்கிரஸ் ரங்கசாமியை ஜெயலலிதா விமர்சித்தார். தோழமைக் கட்சிக்கே துரோகம் இழைத்தவர் மக்களுக்கு துரோகம் இழைக்க மாட்டாரா? என்று மக்களிடம் கேள்வி எழுப்பினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதரசன், தமிழகத்தில் காலியாக இருந்த 4 சட்டப்பேரவை தொகுதிகள் இடைத்தேர்தலிலும் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறினார்.

மேலும்,  வரும் மக்களவைத் தேர்தலிலும், தமிழகத்தில் 22 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற கூட்டணி வெல்லும், மத்தியிலும், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். எங்கள் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அதிகளவில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.