கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்

Must read

தூத்துக்குடி

திமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான  செல்லப்பாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டியன் அதிமுக அமைப்புச் செயலாளராகப் பதவி வகித்து வரும் இவர் முன்னாள் அமைச்சரும் ஆவார்.

கடந்த சில வாரங்களாக இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துக் கொண்டார்.

இவருக்கு கடந்த ஓரிரு நாட்களாகக் காய்ச்சல் இருந்தது.  அதையொட்டி  மாநகராட்சி சார்பில் நடந்த கொரோனா பரிசோதனையில் பரிசோதனை செய்துக் கொண்டார்.

அங்கு செல்லப்பாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி ஆனதையொட்டி மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சைபெற்று வருகிறார்.

More articles

Latest article