சென்னை: கோவையில், வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வரும் வாக்களர்களை இயந்திரமனிதனான ரோபோ ஒன்று  சாக்லெட் கொடுத்து வரவேற்றது இது வாக்காளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

பாவாடை தாவணியுடன் இளம்பெண் உருவத்திலான அந்த ரோபோ, வாக்காளர்களை வாசலில் நின்று வரவேற்றதை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர். இதுபோன்ற நிலா என்ற  ரோபோ ஏற்கனவே புதுச்சேரி தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது கோவையில் டினா என்ற ரோபோ பயன்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ‘மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் வந்து தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கோயம்புத்தூர் வாக்குச்சாவடியில் வாக்களர்களை வரவேற்க ரோபோ TINA என பெயரிலான ரோபா அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.  இந்த ரோபோ வாக்காளர்களுக்கு  பூக்கள், சாக்லேட் வழங்கி வரவேற்கிறது. இதைக் கண்டு வாக்காளர்கள் மகிழ்ச்சியுடன் ஆச்சரியப்படுகின்றனர்.

.இந்த ரோபோவை  அரசுக் கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவர் மிக நேர்த்தியாக உருவாக்கியுள்ளார். டினா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ . ஜாய் ஸ்டிக் (Joy stick) கருவியின் உதவியுடன் இயக்கப்பட்டருது.  இந்த ரோபோ, வரிசையில் காத்திருந்த வாக்காளர்களுக்கு மிட்டாய்களை வழங்கி உற்சாகப்படுத்தியது. தேர்தல் ஆணையத்தின் இந்த முயற்சிக்கு சமூக வலைதளங்களிலும், பொதுமக்களிடையேயும் பெரும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன  குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் இந்த ரோபோவை பார்த்து ஆர்வமாக செல்கின்றனர்.

இதுகுறித்து கூறிய  தேர்தல் அதிகாரிகள், வாக்காளர்களை ஊக்குவிக்கவும் வாக்களிப்பு விழிப்புணர்வை அதிகரிக்கவும் இதுபோன்ற புதுமையான முயற்சிகள் உதவுகின்றன. மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை மகிழ்ச்சியுடன் நிறைவேற்ற வேண்டும் என்பதே நோக்கம் என்றும் தெரிவித்தனர்.

மொத்தத்தில் கோயம்புத்தூரில் நடந்த இந்த சிறிய ஆனால் தனித்துவமான முயற்சி தேர்தல் நாளுக்கு ஒரு புதிய நம்பிக்கையை சேர்த்துள்ளது. வாக்களிப்பு என்பது கடமை மட்டுமல்ல, மகிழ்ச்சியான அனுபவமாகவும் மாற முடியும் என்பதை இது காட்டுகிறது.

இன்று வாக்குப்பதிவு: யாருக்கு வாக்களிக்க வேண்டும் என சிந்தித்து வாக்களியுங்கள்…

[youtube-feed feed=1]