மதுரை: ​ ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போர் காரண​மாக ஈரானில் இருந்து வெளி​யேற முடி​யாமல் தவித்து வந்த 650 இந்​திய மீனவர்​கள் பத்​திர​மாக மீட்​கப்​பட்​டு, சொந்த ஊர்​களுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ள​தாக உயர் நீதி​மன்​றத்​தில் மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது.

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போர் தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள், அங்கு மீன்பிடிக்க போயிருந்த நிலையில், அவர்கள் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து, நாம் தமிழர் கட்சி மீனவர் பாசறை ஒருங்​கிணைப்​பாளர் தீரன் திரு​முரு​கன் என்பவர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் வழக்கு தொடுத்திருந்தார்.

அவரது மனுவில்,  பல மீனவர்​கள் மீன்​பிடி தொழிலுக்​காக சில மாதங்​களுக்கு முன்பு ஈரான் சென்​றனர். ஈரானில் தற்​போது போர் நடந்து வரு​வ​தால் அங்​குள்ள மீனவர்கள் இ-ஜீரோ துறை​முகத்தை விட்டு வெளி​யேற முடி​யாமல் தவித்து வரு​கின்​றனர். சொந்த ஊர்​களுக்கு திரும்​புவதற்கு எந்த வழி​யும் இல்​லாமல் சிறை வைக்​கப்​பட்ட சூழலில் உள்​ளனர்.

போர் பதற்​றம் காரண​மாக மீனவர்​களுக்கு உணவு, குடிநீர், மருத்​துவ வசதி​களும் கிடைக்​க​வில்​லை. சுற்​றி​லும் பீரங்கி தாக்​குதல், வான்​வழி தாக்​குதல்​கள் நடந்து வரு​வ​தால் உயிர் பயத்​தில் உள்​ளனர். ஈரானில் கடலோரப் பகு​தி​களும், துறை​முகப் பகு​தி​களும் போர் காரண​மாக பாது​காப்​பாற்ற இடங்​களாக மாறிவிட்​டன. ஈரான் நாட்​டில் 700-க்​கும் மேற்​பட்ட இந்​திய மீனவர்​கள் இருப்​ப​தாக தகவல் வந்​துள்​ளது.

எனவே மீனவர்​களை பத்​திர​மாக மீட்க மத்​திய அரசு நடவடிக்கை எடுக்க உத்​தர​விட வேண்​டும் என கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனு உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு  நீதிப​தி​கள் ஆனந்த்​வெங்​கடேஷ், ராமகிருஷ்ணன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்போது, மத்தியரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்,  ஈரானில் இருந்து 650 இந்​திய மீனவர்​கள் ஏப். 4-ம் தேதி பத்​திர​மாக மீட்​கப்​பட்டு சொந்த மாநிலங்​ களுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளனர். இவர்​களில் 283 பேர் தமிழக மீனவர்​கள் எனக் கூறப்​பட்​டது.

இதையடுத்து நீதிப​தி​கள், போர்ச் சூழலில் ஈரானில் தவித்த இந்​திய மீனவர்​களை பத்​திர​மாக மீட்டு தாயகம் அழைத்து வந்​ததற்​காக மத்​திய அரசுக்​கும், அதற்கு உறு​துணை​யாக இருந்த மாநில அரசுக்​கும் நீதி​மன்​றம் பாராட்டு தெரிவிக்​கிறது. மனு முடிக்​கப்​படு​கிறது என உத்​தர​விட்​டனர்.

[youtube-feed feed=1]