டில்லி

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா மக்களவையில் காஷ்மீர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.

மத்திய பாஜக அரசு காஷ்மீருக்கு அளித்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.   இந்த உத்தரவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் சிறப்ப் அந்தஸ்து ரத்து செய்தது செல்லும் எனத்  தீர்ப்பளித்தது.  இது பெரும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது..

மக்களவையில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களில் சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்  ஆ.ராசா, ஜம்மு-காஷ்மீர் வழக்கில் சரியோ, தவறோ உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நடைமுறைக்கு வந்திருக்கிறது என்றார்.

மேலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஆளும் கட்சிக்கு அரசியல் ஊக்கத்தை வழங்கியிருப்பதோடு, சட்டரீதியான ஆதரவை வழங்கியிருப்பதாகவும் ஆ.ராசா குறிப்பிட்ட ஆ ராசா காஷ்மீர் விவகாரத்தில் கூட்டாட்சி தத்துவமும், ஜனநாயக மதிப்பீடுகளும் என்ன ஆனது எனக் கேள்வி எழுப்பினார்.