பாராளுமன்ற மைய மண்டபத்தில் வாஜ்பாய் உருவப்படம்: குடியரசு தலைவர் ராம்நாத் திறந்து வைத்தார்

Must read

டில்லி:

பாராளுமன்றத்தின்  மைய மண்டபத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முழு உருவப்படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார்.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா பட்டம் வழங்கி கவுரவிக் கப்பட்ட நிலையில், அவரது உருவப்பபடம் பாராளுமன்ற மைய மண்டபத்தில் வைப்பது குறித்து கடந்த அண்டு இறுதியில் மக்களவை சபாநாயகர் தலைமை யில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், ஒப்புதல் அளித்ததின் பேரில், வாஜ்பாய் உருவப்பபடம் வைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. பிப்ரவரி 12-ம் தேதி வாஜ்பாய் படம் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அதன்படி, இன்று காலை பாராளுமன்றம் கூடுவதற்கு முன்பு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்  பாராளுமன்ற மைய மண்டபத்தில் வாஜ்பாயின் முழு உருவப்படத்தை திறந்து வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர்  மோடி உள்பட மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

More articles

Latest article