இயக்குனரும் நடிகருமான டி.பி. கஜேந்திரன் சென்னையில் இன்று காலமானார் அவருக்கு வயது 68.
சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த கஜேந்திரன் சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்தார், சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் இருந்து நேற்று வீடு திரும்பிய நிலையில் இன்று அவர் காலமானார்.
பழம்பெரும் நடிகை டி.பி. முத்துலட்சமியின் அரவணைப்பில் வளர்ந்த டி.பி. கஜேந்திரன், இயக்குனர் விசு உள்ளிட்ட ஒரு சில இயக்குனர்களிடம் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
விசு நடிப்பில் வெளியான ‘வீடு மனைவி மக்கள்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் சிறிய பட்ஜெட்டில் பல வெற்றிப்படங்களைத் தந்துள்ளார்.
எங்க ஊரு காவக்காரன், பாண்டி நாட்டு தங்கம், பட்ஜெட் பத்மநாபன் உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கி உள்ள இவர் சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் சங்க தலைவராகவும் இருந்துள்ளார்.