“பிரபல இயக்குநரும், நடிகரும், எனது கல்லூரி தோழருமான டி.பி.கஜேந்திரனின் மறைவு செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது” என முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகருமான டி.பி. கஜேந்திரன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் அவருக்கு வயது 68.

அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார், அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது :

பல வெற்றி படங்களை இயக்கியதுடன், பல படங்களில் நடிகராகவும் தோன்றி கலையுலகிற்கு தமது சிறப்பான பங்களிப்பை வழங்கியவர் டி.பி. கஜேந்திரன்.

பிரபல இயக்குநரும், நடிகரும், எனது கல்லூரி தோழருமான டி.பி.கஜேந்திரனின் மறைவு செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள், ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.