பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

வாணி ஜெயராம் தமிழ் தவிர இந்தியாவின் பல்வேறு மொழிகளில் சுமார் 10000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் இவருக்கு அண்மையில் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தலையில் காயமடைந்த நிலையில் உயிரிழந்த நிலையில் இவரது மரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை முதலமைச்சர் நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதை செலுத்த டி.ஜி.பி-க்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து இன்று பிற்பகல் 2 மணிக்கு பெசன்ட் நகர் மின்மயானத்தில் காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்…