பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் டி.பி. கஜேந்திரன் கடந்த சில மாதங்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்த நிலையில் இன்று காலை மரணமடைந்தார்.

இவரது மறைவு செய்தி கேட்டு “எனது கல்லூரி தோழரும் இயக்குனரும், நடிகருமான டி.பி. கஜேந்திரன் மறைவு செய்தி அதிர்ச்சி அளிக்கிறது” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று டி.பி. கஜேந்திரன் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

68 வயதான டி.பி. கஜேந்திரன் பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளதோடு பார்த்திபன் உள்ளிட்ட ஏராளமான நடிகர்களுடன் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.