மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள போட்டா எனும் கிராமத்தில் 93 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்திருக்கிறது.

கொரோனா காரணமாக உயிரிழந்த ஒருவரின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், சில தினங்களுக்கு முன் மேலும் 78 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

700 பேரை மக்கள் தொகையாக கொண்ட இந்த கிராமத்தில் 93 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தொற்று அறிகுறி இல்லாதவர்களை தனிமையில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர், மேலும் இந்த கிராமத்தை தனிமைப்பட்ட பகுதியாக அறிவித்து மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது.

அரசின் கட்டுப்பாடுகளை மீறி கிராம மக்கள் பெருமளவில் இறுதி சடங்கில் கலந்து கொண்டதால் தொற்று அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.