மக்களவைக்கான தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்ததை அடுத்து நாடு முழுவதும் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.

ஏப்ரல் 19ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு துவங்கும் நிலையில் அதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 20 வரும் புதனன்று துவங்குகிறது.

ஜூன் 1ம் தேதி கடைசி கட்ட தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

 

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவை தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

சஹாரன்பூர், கைரானா, முசாபர்நகர், பிஜ்னோர், நாகினா, மொராதாபாத், ராம்பூர், பிலிபித் ஆகிய 8 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19 தேர்தல் நடைபெறும்.

அம்ரோஹா, மீரட், பாக்பத், காசியாபாத், கவுதம் புத்த நகர், புலந்த்ஷாஹர், அலிகார், மதுரா ஆகிய 8 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 தேர்தல் நடைபெறும்.

சம்பால், ஹத்ராஸ், ஆக்ரா, ஃபதேபூர் சிக்ரி, ஃபிரோசாபாத், மெயின்புரி, எட்டா, படான், ஆம்லா, பரேலி ஆகிய 10 தொகுதிகளுக்கு மே 7 தேர்தல் நடைபெறும்.

ஷாஜஹான்பூர், லக்கிம்பூர் கெரி, தௌராஹாரா, சீதாபூர், ஹர்தோய், மிஸ்ரிக், உன்னாவ், ஃபரூகாபாத், எட்டாவா, கன்னோஜ், கான்பூர், அக்பர்பூர், பஹ்ரைச் ஆகிய 13 தொகுதிகளுக்கு மே 13 தேர்தல் நடைபெறும்.

மோகன்லால் கஞ்ச், லக்னோ, ரேபரேலி, அமேதி, ஜலான், ஜான்சி, ஹமிர்பூர், பண்டா, ஃபதேபூர், கௌசாம்பி, பாரபங்கி, பைசாபாத், கைசர்கஞ்ச், கோண்டா ஆகிய 14 தொகுதிகளுக்கு மே 20 தேர்தல் நடைபெறும்.

சுல்தான்பூர், பிரதாப்கர், புல்பூர், அலகாபாத், அம்பேத்கர்நகர், ஷ்ரவஸ்தி, துமரியகஞ்ச், பஸ்தி, சந்த் கபீர்நகர், லால்கஞ்ச், அசம்கர், ஜான்பூர், மச்லிஷாஹர், பதோஹி ஆகிய 14 தொகுதிகளுக்கு மே 25 தேர்தல் நடைபெறும்.

மஹராஜ்கஞ்ச், கோரக்பூர், குஷிநகர், தியோரியா, பான்ஸ்கான், கோசி, சேலம்பூர், பல்லியா, காஜிபூர், சண்டௌலி, வாரணாசி, மிர்சாபூர், ராபர்ட்ஸ்கஞ்ச் ஆகிய 13 தொகுதிகளுக்கு ஜூன் 1 தேர்தல் நடைபெறும்.