‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ பற்றி பேசும்போது, நாடாளுமன்றத் தேர்தலை நடத்த 1½ மாதங்கள் அவகாசம் என்று பிரியங்கா சதுர்வேதி எம்.பி. கூறியுள்ளார்.

சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரான பிரியங்கா சதுர்வேதி 2024 மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு குறித்து மும்பையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது :

“இவ்வளவு கால அவகாசம் கொடுப்பதற்கு முன் தேர்தல் ஆணையம் ஏதாவது யோசித்திருக்க வேண்டும்… ஒரு பக்கம் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்று பேசிக்கொண்டு மறுபக்கம் 7 கட்ட தேர்தல், கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் என்பது…

நாடு முழுவதும் தேர்தல் நடைமுறை இருக்கும் நிலையில் அடுத்த இரண்டு மாதத்திற்கு எந்த ஒரு அரசும் செயல்படமுடியாத சூழல் உள்ளது” என்று கூறினார்.

மேலும், எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு மக்கள் பதில் அளிப்பார்கள், மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி வேட்பாளர்கள் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.