18வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் டெல்லியில் இன்று அறிவித்தார்.

543 தொகுதிகளுக்கான முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 19ல் தொடங்குகிறது. ஜூன் 4ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றார். நாடு முழுவதும் 96.8 கோடி பேர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

முதல் கட்ட தேர்தல் – ஏப்ரல் 19ம் தேதி

2வது கட்ட தேர்தல் – ஏப்ரல் 26

3வது கட்ட தேர்தல் – மே 7

4வது கட்ட தேர்தல் – மே 13

5வது கட்ட தேர்தல் – மே 20

6வது கட்ட தேர்தல் – மே 25

7வது கட்ட தேர்தல் – ஜூன் 1

வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி

தமிழகத்தில் முதல்கட்டத்திலேயே ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலும் நடத்தப்பட உள்ளது.

தமிழ்நாட்டுடன் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள மக்களவை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

18 முதல் 19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்கள் 1.82 கோடி பேர் உள்ளனர். 20 முதல் 29 வயதுக்குட்பட்டோர் 19.74 கோடி வாக்காளர்கள். 85 வயதுக்கு மேற்பட்ட 82 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு 1.5 கோடி பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைவசம் உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.