குருகிராம்

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு அரியானா மாநிலத்தில் உணவு விடுதிகள் மற்றும் பப்களில் 50% தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

இரண்டாம் அலை கொரோனா  பாதிப்பால் நாட்டில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.   அனைத்து மாநிலங்களிலும் மக்களிடையே கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.   பல இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்படுகின்றன.

இந்நிலையில் அரியானாவில் குருகிரம் நகரில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு உணவு விடுதிகள், பப்கள், மது பான விடுதிகளில் சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன..   அவ்வகையில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் 50% தள்ளுபடியும் ஒரு டோஸ் போட்டுக் கொண்டவர்களுக்கு 25% தள்ளுபடியும் அளிக்கப்படுகின்றன.

இதனால் வர்த்தகம் மேம்படுவதோடு கொரோனா தடுப்பூசி போடுவதும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.  அத்துடன் இந்த நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் கொரோனா முன் களப் பணியாளர்களுக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. 

இந்த வளாக நிர்வாகி, “கொரோனா முன் களப் பணியாளரக்ள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு இலவச வாகனம் நிறுத்த சேவைகள், கடைகளில் வாங்கும் பொருட்களுக்குச் சிறப்புத் தள்ளுபடிகள் அளிக்கிறோம்.   இதைப் பெற பணியாளர்கள் தங்கள் அடையாள் அட்டையை காட்டினால் போதுமானது” எனத் தெரிவித்துள்ளார்.